பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கணவர் கொடுத்த காதல் பரிசு! இன்ப அதிர்ச்சியில் கண்ணீர்விட்ட மைனா நந்தினி! வைரலாகும் எமோஷனல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி. இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ஆதரவை தொடர்ந்து அவர் ஏராளமான தொடர்களில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளித்திரையிலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் மைனா நந்தினி தற்போது வேலைக்காரன் என்ற தொடரில் நடித்து வருகிறார். மைனா நந்தினிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சீரியல் நடிகர் யோகேஸ்வரனுடன் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு துருவன் என்ற அழகிய ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காதலர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காதலர் தினத்தன்று யோகேஸ்வரன் தனது மனைவிக்கு கேக், டெடிபியர், துருவன் என்ற பெயர் பொறித்த டாலர் என ஏராளமான கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தனது மார்பில் நந்தினி என மனைவியின் பெயரையும் பச்சை குத்தியுள்ளார். இதனைக்கண்ட மைனா நந்தினி இன்ப அதிர்ச்சியில் கண்கலங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.