#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா பாதிப்பால் துபாயில் உயிரிழந்த பிரபல நடிகர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் இதுவரை 2.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ. ஹாசன் கொரோனோவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் டெக்ஸ்டைல் நடத்தி பெரும் தொழிலதிபராக இருப்பவர் எஸ்.ஏ.ஹாசன். கேரள மாநிலம் ஆலுவா அருகில் உள்ள சங்கரன்குழியை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாளத்தில் ஹலோ துபாய்க்காரன் என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வேறு மருத்துவமனையில் அனுமதித்து செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 51 வயது நிறைந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.