வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
நீளமான கம்பை கையில் வைத்துக்கொண்டு மாளவிகா மோகனன் செய்த செயல்.. அதிர்ச்சியடைந்த தங்களான் படக்குழு.?
தமிழ் சினிமாவில் மாஸ்டர், மாறன், பேட்ட போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தங்கலான்'. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார். 'தங்கலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் மெலிந்து விட்டதாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் தங்கலான் திரைப்படத்திற்காக இந்த தோற்றத்தில் இருக்கிறேன் என்று பதிலளித்தார். தற்போது மாளவிகா மோகன் சிலம்பம் பயின்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. தங்கலான் திரைப்படத்திற்காக சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.