கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திடீரென இரவில் கேட்ட அலறல் சத்தம்.! அக்கம்பக்கத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி.! பகீர் சம்பவம்!!
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே செல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். 35 வயது நிறைந்த அவர் 10 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விஜயனின் மனைவி மோகனா. அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மனைவியுடன் தகராறு
ராணுவத்தில் பணிபுரிந்து வந்த விஜயன் ஒரு மாத கால விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர்கள் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். இந்த புது வீடு தொடர்பாக அவரது மனைவிக்கு அவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் இரவில் மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்த விஜயன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கத்தியை கொண்டு அறுத்துள்ளார்.
இதையும் படிங்க: அழுதுகொண்டே இருந்த குழந்தை; பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொன்று தாயும் பலி.. சிவகங்கையில் அதிர்ச்சி.!
கழுத்தறுத்து கொலை
இந்த நிலையில் மோகனாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜயனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை; தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!