கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
செங்கல்பட்டில் கொடூரம்... நடைப்பயிற்சிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த விபரீத முடிவு.!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகாலை நடை பயிற்சிக்கு சென்ற நபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட உடல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லவன் கார்டனை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் காலியான வீட்டுமனை ஒன்று உள்ளது. அந்த இடத்தில் ரத்த காயங்களுடன் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று உறுதியானது.
காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விரைவாக விசாரணையை தொடங்கினர். காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம், மதுரை வீரன் தெருவை சேர்ந்த சரவணன்(39) என தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட நபர் அதிகாலை நடை பயிற்சிக்கு செல்லும்போது வெட்டி கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர்: காதல் திருமணம் முடிந்த 10 நாட்களில், செயின் திருட்டு வழக்கில் கைதான இளைஞர்; ஆன்லைன் கடனை அடைக்க விபரீத செயல்.!
திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை
சரவணன் தினமும் அதிகாலை நடை பயிற்சிக்கு செல்வதை நோட்டமிட்ட கொலைகாரர்கள் நன்றாக திட்டமிட்டு அவரை படுகொலை செய்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் முன் பகை காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டாரா.? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குடும்பப்பிரச்சனையில் விபரீதம்; மகனை கிணற்றில் தூக்கி வீசி, தாய் தற்கொலை.!