பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடஅட.. அசத்துறீயேமா! அசுரன் நாயகியை சான்றிதழ் வழங்கி பாராட்டிய மத்திய அரசு! என்ன காரணம் தெரியுமா??
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியார். எவ்வளவு புதிய கதாநாயகிகள் வந்தாலும் அவர் மவுசு குறையாமல் தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் பயங்கர பிஸியாக இருந்த மஞ்சுவாரியர்மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
பல வருடங்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திருமணத்திற்குப் பிறகும் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு மஞ்சு வாரியரை நேர்மையாக வரி செலுத்தியவர் என
சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. அதாவது மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆண்டுதோறும் நேர்மையாக வரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது
2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரியை முறையாக கட்டியதால் நடிகை மஞ்சு வாரியாரை பாராட்டி இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரசிகர்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.