வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. அசிங்கப்படுத்திய மன்சூர் அலிகான்.? வைரலாகும் வீடியோ.!



Mansoor Ali khan controversial press meet

தமிழ் சினிமாவில் 80 களின் காலகட்டத்தில் இருந்து பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Mansoor

வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் குணசித்திர நடிகராகவும், காமெடி கதாபாத்திரத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். சில வருடங்களாக திரை துறையில் நடிக்காமல் இருந்த மன்சூர் அலிகான் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய் கதாநாயகராக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படத்தில் குறிபிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மன்சூர் அலிகான். இதனையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் அலிகான் லியோ திரைப்படம் குறித்து  பத்திரிகையாளர்கள் இவரிடம் கேள்வி கேட்டனர். இதற்கு நக்கலாக பதில் அளித்து இருக்கிறார் மன்சூர் அலிகான்.

Mansoor

அவர் கூறியதாவது,  அரசியல்வாதிகள் ஒரு கையெழுத்து போட்டு பல கோடி ஏமாற்றி விடுகிறார்கள். அந்த மாதிரி ஒரு படம்  என்னை வைத்து எடுக்கலாம் அதை விட்டுட்டு, தம்மாதுண்டு ரோலுக்கு இவ்வளவு பெரிய பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று கலாய்த்து பதில் அளித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தவருக்கு வாய்ப்பு கொடுத்ததே பெரிய விஷயம், இப்படி பேசாதீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.