"நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டது! நான் வழக்கு தொடர்வேன்!" மன்சூர் அலிகான் ஆவேசம்!



Mansoor ali khan controversy viral

1991ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த "கேப்டன் பிரபாகரன்" திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மன்சூர் அலிகான்.

trishatrisha

முன்னதாக அனுபம் கெரின்  நடிப்பு பள்ளியில் படித்த மன்சூர் அலிகான், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான "லியோ'" படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் மன்சூர் அலிகான் திரிஷா குறித்து அநாகரீகமாக பேசியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரப்பரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து பலரும் மன்சூர் அலிகானிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், த்ரிஷாவும் கண்டனம் தெரிவித்திருந்தார்,

trisha

இதையடுத்து தற்போது மீண்டும் " நான் மன்னிப்பு கேட்கும் சாதியா? என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை. நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டது. கண்டன அறிக்கையை வாபஸ வாங்காவிட்டால், நான் வழக்கு தொடர்வேன்" என்று மன்சூர் அலிகான் மீண்டும் சர்சையைக் கிளப்பியுள்ளார்.