#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் செட்-லிருந்து.. அவசரமாக ஓடிய மாரிமுத்து.! இறுதி நிமிடங்களை பகிர்ந்த நடிகர்.!
தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக வாழ்க்கையை தொடங்கி இன்று மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்கியவர் மாரிமுத்து. இவர் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் என இரண்டு திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.
மேலும் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்ஜே சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். சினிமாவில் இவரது யதார்த்தமான நடிப்பு ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது. மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரத்திற்காக இவர் பேசிய வசனங்கள் மற்றும் இவரது யதார்த்தமான நடிப்பு சின்னத்திரை ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. நடிகர் மாரிமுத்து என்பதையும் தாண்டி ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்து வந்தார். அது வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த வில்லத்தனத்தையும் மீறி தன்னை ரசிக்க வைத்தவர் மாரிமுத்து.
இந்நிலையில் அவரது இறுதி நிமிடங்களில் நடந்தவற்றை விளக்கி இருக்கிறார் அவருடன் எதிர்நீச்சல் தொடரில் தம்பியாக நடித்து வந்த கமலேஷ். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் "இன்று காலை டப்பிங் பேச வந்த மாரிமுத்துவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அதன்பிறகு எந்த தகவலும் இல்லாததால் அவரது மகனை தொடர்பு கொண்டோம். அப்போதுதான் அவர் இறந்த செய்தி எங்களுக்கு தெரிந்தது" என கண்ணீருடன் தெரிவித்து இருக்கிறார் கமலேஷ். இவர் எதிர் நீச்சல் தொடரில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.