விழுப்புரம்: காதலர் நாளிதழில் வித்தியாசமான திருமண வரவேற்பு; கவனத்தை ஈர்த்த இளைஞர்களின் போஸ்டர்.!
இன்றளவில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அச்சடிக்கப்படும் பத்திரிகைகள் முதல் பேனர் வரை, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப திருமண வீட்டார் ட்ரெண்டிங்கான சூழலை தேர்வு செய்யும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவலூர்பேட்டை பகுதியை சார்ந்த நபர்கள், தங்களது கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் திருமணத்திற்கு அச்சடித்த போஸ்டர் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
காதல் நாளிதழ்:
பார்ப்பதற்கு செய்தித்தாள் போல அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிவில், காதலர் நாளிதழ் என தலைப்பிடப்பட்டு சிறு சிறு செய்திகளாக முக்கிய விஷயங்கள் பகிரப்பட்டுள்ளன. அதன்படி, எங்களுக்கு கல்யாணம் வேண்டும் என்ற தலைப்பில் தொடங்கி, சரக்கு கேட்டு பாச போராட்டம், குடிபோதையில் இருந்து மீண்ட நபர்கள், நமக்கு முதல் எதிரி நம்ம ஊர் காரங்க தான், திருடர்கள் ஜாக்கிரதை, விளையாட்டுச் செய்திகள், நல்ல பிள்ளைகள் நாங்கள் என்ற தலைப்பில் அவர்களின் பல்வேறு வசனங்களும் பகிரப்பட்டு இருக்கின்றன.
இதையும் படிங்க: "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்"; சர்ச்சை பேனரால் அதிர்ச்சி.. டிசைனர் உட்பட 3 பேர் கைது.!
இதில் முக்கிய நிகழ்வாக திருமண வரவேற்பில் ஆடல் பாடல் கச்சேரி வைப்பதாக கூறிவிட்டு, திருமண மஹாலில் 32 நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்டதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வைரல் போஸ்டர்
இதையும் படிங்க: திருப்பூர்: சொத்துக்காக இப்படியா?.. மாமனாரை தீர்த்துக்கட்டிய மருமகன்.. அரங்கேறிய வெறிச்செயல்.!