#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அலப்பறையின்றி சிம்பு வீட்டில் விசேஷம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!! கல்யாணம் எப்போ தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வந்தவர்கள் விஷால், ஆர்யா மற்றும் சிம்பு. இவர்களது திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் விஷால் மற்றும் ஆர்யா தனது திருமண அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து சிம்புவின் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழும்பியது.
இந்நிலையில் சிம்பு வீட்டில் எளிமையாக, ஆர்ப்பாட்டமில்லாமல் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு திருமணம் எனவும் செய்திகள் வெளிவந்தது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குறளரசன், அடுத்து சிம்பு நடித்து திரைக்கு வந்த இது நம்ம ஆளு என்ற படத்தின் மோளம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி இருந்த குறளரசன் சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் தனது தாய் மற்றும் தந்தையின் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
இந்நிலையில் தற்பொழுது அவருக்கு மிகவும் எளிமையாக வரும் ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குறளரசன் மதம் மாறியது தனது காதலியை கரம் பிடிப்பதற்காக எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.