பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் ரசிகர்களை மிஞ்சிய கேரளா விஜய் ரசிகர்கள்! என்ன செய்துள்ளார்கள் தெரியுமா?
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். ஒருவழியாக திருட்டுக்கதை பிரச்னை சமரசமாக பேசி முடிக்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ் ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு கேரள ரசிகர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். கேரளா ரசிகர்கள் 175 அடியில் விஜய்க்கு கட்ட அவுட் வைத்து உள்ளனர் இதனை தமிழ் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர் இதனால் எங்கு பார்த்தாலும் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் அதிகமாகவே உள்ளது இதனால் இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய உயர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.