#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. சாக்லேட் பாய் மாதவனின் மகனாக இது! நல்லாவே வளர்ந்துட்டாரே.. பெருமிதத்துடன் அவரே போட்ட பதிவு!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முதலில் சாக்லேட் பாயாக, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டு இருப்பவர் நடிகர் மாதவன். ஹிந்தியிலும் செம பிஸியாக இந்தியளவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் தற்போதும் இவருக்கென பெண் ரசிகர்கள் ஏராளம். தற்போது இவரது கைவசம் பல படங்கள் உள்ளன. நடிகர் மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் வேதாந்த் தற்போது தனது 16வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் மாதவன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, எல்லாவற்றிலும் என்னை முந்தி பொறாமைப்பட வைத்ததற்கு மிக்க நன்றி. என் இதயம் மிகுந்த பெருமை கொள்கிறது. உன்னிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உங்களால் இந்த உலகத்தை சிறந்ததாக மாற்ற முடியும் என நம்புகிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்ட தந்தை என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.