#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்! பிக்பாஸ் குழு பற்றிய புதிய தகவலை கூறிய நடிகை மதுமிதா.
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இந்த போட்டியின் கடைசியில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்று மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் நடிகை மதுமிதாவை பிக்பாஸ் குழு எந்த காரணமும் கூறாமல் வீட்டிலிருந்து வெளியேறியது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சில தினங்களுக்குள் அவர் மீது மிரட்டல் வழக்கு ஒன்றை பதிவிட்டுள்ளனர் விஜய் தொலைக்காட்சி. ஆனால் அதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மதுமிதா.
ஆனால் வேறு எந்த தனியார் தொலைக்காட்சி பேட்டியிலும் கலந்து கொள்ள வில்லை. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி பற்றி எதுவும் பேசக்கூடாது என்றும் அப்படி மீறினால் அக்ரீமெண்ட் வைத்து வழக்கு போடுவோம் என்றும் பிக்பாஸ் குழு மிரட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் நிகழ்ச்சிக்கான மொத்த சம்பளத்தையும் தற்போது தந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உண்மையை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் எனவும் கோபமாக கூறியுள்ளார்.