கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
போதையில் தகராறு.. மனைவியை தவறாக பேசிய கறிக்கடைக்காரர்.!! போட்டுத் தள்ளிய நண்பன்.!!
திருப்பூர் அருகே தனது மனைவியை ஆபாசமாக பேசியதால் கோபமடைந்த நபர் நண்பனை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் முத்துராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நண்பர்களுடன் மது விருந்து
திருப்பூரில் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி(40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களான முத்துராஜா(39) மற்றும் வடிவேல் ஆகியோருடன் தனது கடையில் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார். நண்பர்கள் அனைவரும் அளவுக்கதிகமான மது குடித்து போதையில் இருந்துள்ளனர்.
மனைவியை தவறாக பேசியதால் கொலை
இந்நிலையில் மது போதையில் இருந்த கசாப்பு கடைக்காரரான கார்த்தி தனது நண்பன் முத்துராஜாவின் மனைவியைப் பற்றி ஆபாசமாகவும் தவறாகவும் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா கறிக்கடையில் இருந்த கத்தியை எடுத்து கார்த்தியை கடுமையாக வெட்டி இருக்கிறார். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கார்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கணவர் கண்முன் மனைவியின் நகை கொள்ளை.. திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.. தரதரவென இழுத்துச்சென்று பகீர்.!
கைது செய்யப்பட்ட முத்துராஜா
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்யப்பட்ட கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை முத்துராஜாவை கைது செய்து விசாரித்து வருகிறது. மது போதையில் நண்பன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தவெக விஜயின் முதல் மாநாடு; பழ. கருப்பையா சொல்வது என்ன? விபரம் உள்ளே.!