#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நடிகை மீனா.! செம ஸ்டைலாக, கம்பீர நடையுடன் மாஸா இருக்கார்ல!! வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மீனா. இவர் பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தற்போது வரை ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீனா கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் வித்தியாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் பெருமளவில் மனமுடைந்து போனர். இந்நிலையில் கணவரின் மறைவால் மீளாத் துயரில் தவித்துவந்த மீனாவை அவரது தோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீள செய்து வருகின்றனர். அண்மையில்கூட அவரது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்ச்சியடைய செய்தனர்.
இந்த நிலையில் தற்போது மீனா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளார். அவர் ஸ்டைலான உடையில் கம்பீரமாக நடைபோட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் நீங்கள் எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.