வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
"தனுஷ் வேற லெவல்.. விஜய், அஜித்லாம் தனுஷ் பக்கத்துல கூட வரமுடியாது" சர்ச்சையாக பேசிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து முன்னணி நடிகராக பெயர் பெற்றுள்ளார்.
தமிழில் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தனுஷ் தமிழ் மட்டுமல்லாது இந்தி ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் பெயர் பெற்ற நடிகராக வலம் வருகிறார்.
இது போன்ற நிலையில், பிரபல வில்லன் நடிகர் மீசை ராஜேந்திரன் தனுஷ் பற்றி பெருமையாக பேசுகிறேன் என்கிற பெயரில் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி மற்ற நடிகர்களின் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.
அவர் கூறியதாவது, தனுஷ் வெற்றிக்கு காரணம் ரஜினி கிடையாது அவருடைய சொந்த முயற்சியினால் மட்டுமே அவர் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார். விஜய், அஜித் எல்லாம் தனுஷ் அளவிற்கு நடிக்கவே முடியாது. சிம்புவையும் தனுஷையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ஆனால் ஏணி வைத்தாலும் தனுஷின் இடத்தை சிம்புவால் பிடிக்க முடியாது" என்று பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.