#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவங்க கற்றுக்கொடுத்தது இதுதான்! மறைந்த தன் கணவர் மற்றும் நடிகர் புனீத் குறித்து மேக்னா ராஜ் வெளியிட்ட உருக்கமான பதிவு!
கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் நடிகர் அர்ஜுனின் அக்கா மகன் ஆவார். சிரஞ்சீவி நடிகை மேக்னா ராஜை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சார்ஜா மரணம் அடைந்தார்.
39 வயதில் அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைப்போலவே கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் 46 வயதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புனித் ராஜ்குமார் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியான மேக்னா புனித் ராஜ்குமார் மற்றும் சிரஞ்சீவி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, கன்னட சினிமாவின் இரண்டு இரத்தினங்கள். இருவரும் நிகழ்காலம் எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.