பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மறைந்த தனது கணவருடன் வளைகாப்பு விழாவை கொண்டாடிய பிரபல நடிகை! நெகிழ்ச்சியில் கண்கலங்கும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல நடிகரும், அர்ஜுனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் தனது 39 வயதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி நடிகை மேக்னா. அவர் கணவர் இறந்த போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். மேக்னா தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மேக்னாவிற்கு சமீபத்தில் இரட்டைக்குழந்தை பிறந்ததாக வதந்திகள் பரவி வந்தது.அதற்கு அவர் மறுப்பும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மேக்னாவிற்கு நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது மறைந்த அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் நினைவாக அவரது ஆளுயர கட்அவுட் அங்கு வைக்கப்பட்டிருந்தது. இத்தகைய புகைப்படங்களை மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கண்கலங்கியுள்ளனர்.