பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வாவ்.. செம கியூட்ல! மறைந்த கணவருடன் கொள்ளை அழகில் நடிகை மேக்னா ராஜ்!! வைரல் புகைப்படம்!!
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் நடிகை ஆவார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி நடிகர் சிரஞ்சீவி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பொழுது அவரது மனைவி மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.
பின்னர் அவருக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் கணவர் உயிரிழந்த சோகத்தில் தவித்து வந்த நடிகை மேக்னா ராஜ் தற்போது அதிலிருந்து கொஞ்சகொஞ்சமாக மீண்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கணவர் மறைவிற்கு முன் அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.