#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜோதிகாவுக்கு ஜோடியான மிர்ச்சி செந்தில்... எதில் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகர் செந்தில். இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ந்து ரேடியோவிலும் பணிபுரிந்து வருகிறார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் தன்னுடன் நடித்த நடிகையான ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா எனும் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மிர்ச்சி செந்தில் அவ்வப்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது பிரபல நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நடிகை ஜோதிகாவுடன் இணைந்து மிர்ச்சி செந்தில் நடித்துள்ளார்.
அதனை மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ சன்ஃபீஸ்ட் வித் ஜோதிகா மேம் என பதிவிட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.