#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரவணன் மீனாட்சி ஹீரோவோட அம்மாவை பார்த்து இருக்கீங்களா..? வைரல் வீடியோ.!
சீரியல்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் புகழ்பெற்றவர் தான் நடிகர் மிர்ச்சி செந்தில். நான், நீங்கள், ராஜா சார் எனும் இவருடைய வானொலி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தற்போது செந்தில் ஜீ தமிழில் அண்ணா என்னும் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்.
கடந்த 2007 இல் வெளியாகிய மதுர தொடரில் நடிக்க ஆரம்பித்த இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பிடித்தார். அதன் பின் மாப்பிள்ளை மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல் களில் நடித்தார். இதற்கிடையில் அவருக்கு திருமணமும் ஆகியது.
தனது மனைவி ஸ்ரீஜா உடன் சேர்ந்து அவர் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இத்தகைய சூழலில் தற்போது ஜீ தமிழ் குடும்ப விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை ஜீ தமிழ் நிர்வாகம் சர்ப்ரைஸ் செய்துள்ளது. செந்திலின் தாயார் முதல்முறையாக மேடைக்கு வந்து செந்திலுக்கு அந்த விருதை கொடுத்து சிறப்பித்துள்ளார்.