#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சர்ச்சை இயக்குனர் நவீனின் டிவிட்டர் பதிவால்... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி.!
இயக்குனர் நவீன் மூடர்கூடம் என்ற படத்தை இயக்கி, நடித்து இருந்தார். படத்தில் சென்றாயன், நவீன், அனுப்பமா, ஓவியா, ஜெயபிரகாசம் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
இதன் பின்பு இயக்குனர் நவீன் எனக்கு வாய்த்த அடிமைகள், கொளஞ்சி என்ற இரு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. எனவே இவர் திரைப்படங்களை இயக்குவதில் சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நவீன், பல சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனி ட்விட்டரில் வடமாநிலத்தவர்க்கு ஆதரவாக பதிவு எழுதி இருந்தார். இதற்கு சமூக வலைத்தளவாசிகள் ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருந்தனர்.
தற்போது நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் "வடவர்கள் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் பிழைப்பை தேடி வரும் வடநாட்டவர்களின் மீது வன்மத்தை கொட்டுவது சரியான செயல் அல்ல. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு, சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம் ❤️
— இயக்குநர் நவீன் (@NaveenFilmmaker) பிப்ரவரி 17, 2023