#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசியல் பேசும் அம்மன்! வெளியானது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்! வீடியோ இதோ!
ஆர்ஜே பாலாஜி நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். இதனை அவருடன் என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார். மேலும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இதில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மெளலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்குக்கு முன்பே மூக்குத்தி அம்மன் திரைப்படம் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.