#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டபுள் ஆக்ஷனில் சும்மா கெத்துகாட்டும் மொட்டை ராஜேந்திரன்! அதுவும் என்னென்ன கெட்டப்பு பார்த்தீர்களா! மனுஷன் அசத்துறாரே!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் கொடூர வில்லனாக மிரட்டி வந்த மொட்டை ராஜேந்திரன் தற்போது காமெடி நடிகராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளார். மேலும் அதனைத் தொடர்ந்து அவர் தற்போது டைம் அப் என்ற படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என டபுள் ஆக்ஷனில் மிரட்டவுள்ளார். மேலும் லொள்ளுசபா மனோகர், சூப்பர் குட் சுப்ரமணி, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ் என பலரும் முக்கிய இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மனுபார்த்திபன் இயக்கி நடிக்கும் இப்படத்தில் மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் தீபன் சக்ரவர்த்தி இசையமைக்க கனிராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் 25ந் தேதி நாளை வெளிவருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் மனு பார்த்திபன் கூறுகையில், டைம் ஆஃப் திரைப்படம் பேண்டஸி காமெடி படமாக உருவாகியுள்ளது. இதில் மொட்டை ராஜேந்திரன் வில்லன், நவீன எமன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இப்படம் சிரித்து ரசிக்க கூடிய வகையில் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் என கூறியுள்ளார்.