#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியானது மிஸ்டர்.லோக்கல் ட்ரெய்லர்; கலக்கல் காமெடி! ரசிகர்கள் உற்சாகம்.!
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் Mr . லோக்கல்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்றாற்போலவே ட்ரைலர் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாராவின் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வரும் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டு புதிய தேதி வெளியிடப்பட்டது. அதில் மே 17ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.