கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"தமிழ் சொல்லித்தந்தது மனிதத்தை" - வெள்ளநீரில் சிக்கிய ஆட்டோவுக்கு உதவிய பேருந்து.. நெகிழவைக்கும் காணொளி.!
ஒவ்வொரு ஆண்டும் சென்னை வெள்ளம் மனிதத்தை உறுதி செய்கிறது.
வெள்ளத்தின் பிடியில் சென்னை
சென்னையில் உள்ள மாமல்லபுரம் - காரைக்கால் இடையே, வங்கக்கடல் பகுதியில் உருவாகிய பெஞ்சல் புயல் கரையை கடக்கிறது. இன்று அதிகாலை 4 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: விரைந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
மழைநீரில் சிக்கிய ஆட்டோ
இந்நிலையில், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, பனகல் பார்க் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் ஆட்டோ ஒன்று சிக்கிக்கொண்ட நிலையில், அதன் ஓட்டுநர் வெள்ளத்தின் நடுவே ஆட்டோவை தள்ள இயலாமல் தத்தளித்து வந்தார். அப்போது, அவ்வழியாக மாநகர பேருந்து ஒன்று வந்தது.
உதவிக்கரம் நீட்டிய பேருந்து ஓட்டுநர்
ஆட்டோ ஓட்டுனரின் இன்னலை நேரில் கண்ட எம்டிசி பேருந்து ஓட்டுநர், துரிதமாக செயல்பட்டு ஆட்டோவை லேசாக ஒட்டியபடி வாகனத்தை நகர்த்தி, ஆட்டோ ஓட்டுனருக்கு பேருதவி செய்தார். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மழை நீரில் சிக்கி பழுதடைந்த ஆட்டோவை 500 மீட்டர் வரை ஆட்டோவை தள்ளி மேலான பகுதியில் கரை சேர்த்து சென்ற மாநகர பேருந்து.
— MTC Chennai (@MtcChennai) November 30, 2024
இடம்: பனகல் பார்க் சாலை, தி. நகர்.
Video credits: @polimernews #MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #NammaChennai | #NammaBus | #Chennai |… pic.twitter.com/h4LAiHbFYD
இதையும் படிங்க: #Breking: உருவானது ஃபெங்கல் புயல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!