#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட்றா சக்க..பிரபல டிவி சீரியலில் களமிறங்கியுள்ள சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன்! அதுவும் எந்த ரோலில் பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமாக ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதன் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றியாளரானவர் மூக்குத்தி முருகன்.
அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளிலும், மேலும் சினிமாவிலும் பல பாடல்களை பாடி வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது விஜய் டிவி சீரியலில் களமிறங்கியுள்ளார். அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்ட தொடர் ஈரமான ரோஜாவே.
அட அட அட.. பின்றீங்களே மூக்குத்தி முருகன்! 👏
— Vijay Television (@vijaytelevision) May 7, 2021
ஈரமான ரோஜாவே - இன்று மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #EeramaanaRojaave #VijayTelevision pic.twitter.com/WDVBiUUakr
இந்தத் தொடரில் ஹீரோயினான மலருக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கெஸ்ட் ரோலில் பாட்டு படுவதற்காக மூக்குத்தி முருகன் ஈரமான ரோஜாவே தொடரில் இணைந்துள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.