பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை மும்தாஜா இப்படி செய்வது?. ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!. உண்மையை போட்டுடைத்த ரசிகன்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2. இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்று தனது இயல்பான குணத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மும்தாஜ்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜ்க்கு ரசிகர்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை மும்தாஜ் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.அதுமட்டுமின்றி
அங்கு இருந்த சில பெண் ரசிகர்களுடன் டப்ஸ்மாஸ் செய்து மகிழ்ந்தார்.
இந்நிலையில் மும்தாஜ் குறித்து மேடையில் பேசிய இளைஞன் ஒருவர், நிகழ்ச்சியில் அழைப்பிற்காக மும்தாஜ் வீட்டிற்கு சென்றபோது நடந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யத்துடன் கூறியுள்ளார்.
பொதுவாகவே ஒரு நடிகர், நடிகைகள் வீட்டிற்கு சென்றால் அங்கு வேலை பார்ப்பவர்கள்தான் வருபவர்களுக்கு டீ காபி போட்டு கொடுத்து கவனிப்பது வழக்கம்.
ஆனால் நாங்கள் மும்தாஜ் வீட்டிற்கு சென்றபோது மும்தாஜ் அவரே எங்களுக்கு டீ போட்டுக் கொடுத்து அன்பாக உபசரித்தார்.
மிகப்பெரிய நடிகை ஒருவர் ரசிகர்களுக்கு தானே டீ போட்டுக் கொடுத்தது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இது எனது வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் எனவும் அந்த ரசிகர் கூறினார். இதைக் கேட்ட அனைவரும் ஆரவாரம் செய்து மும்தாஜை வாழ்த்தினர்.