#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
90 களில் கலக்கிய நடிகை கௌசல்யாவின் திருமணம் குறித்து வெளியான புதிய தகவல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்!
90 களில், இளைய தளபதி விஜய் உட்பட, பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌசல்யா. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இதுவரை தன்னுடைய நடிப்பு மற்றும் உடைகளில் கூட சற்றும் ஆபாசம் இல்லாமல் நடிக்கும் இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர். 40 வயதாகும் இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு தகவல் பரவியது.
தற்போது இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள நடிகை கௌசல்யா, கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று குறுகிய எண்ணத்தோட வாழ எனக்கு விருப்பமில்லை. பரந்த மனப்பான்மையோட எல்லோருக்காகவும் இயக்க விரும்புகிறேன்.
அதுமட்டுமின்றி எனக்கு இப்படி சிங்கிளா இருப்பது தான் மிகவும் பிடித்திருக்கு. அதனால் இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.