#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உங்க மனைவியென்ன திருநங்கையா?? மோசமாக கேலி செய்த நெட்டிசன்! சரமாரியாக லெப்ட் ரைட் வாங்கிய நகுல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து பிரபல நடிகராக இருப்பவர் நகுல். அவர் தற்போது படங்கள் மட்டுமின்றி பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார். நகுல் ஸ்ருதி என்பவரை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகள் உள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது பல கருத்துக்களை தெரிவித்து பதிவுகளை வெளியிடுவார். மேலும் தன்னை குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவிப்பதற்கும் பதிலளிப்பார். இதனால் நகுலுக்கு ஸ்ருதி குறித்த சர்ச்சையான போஸ்ட் வந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் அண்மையில் நகுல் தனது மனைவிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதற்கு கீழ் நெட்டிசன் ஒருவர், ப்ரோ உங்க மனைவி மிகவும் கேவலமாக இருக்கிறார். அவங்க என்ன திருநங்கையா என கமெண்ட் செய்துள்ளார். இதனை கண்டு ஆவேசமான நகுல், என்னை ப்ரோ என அழைக்க வேண்டாம், உனக்கும் எனக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. நீ வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கும் ஒரு கேவலமான குப்பை. நீ செய்வதற்கெல்லாம் ஒரு நாள் அனுபவிப்பாய். அந்த நாள் ஏன் என உனக்கு புரியும். என்ன செய்கிறாயோ அதை செய்து கொண்டே இரு. நீ ஒரு வெத்துவேட்டு என பதிலளித்துள்ளார்.