#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.. பிக்பாஸில் கலந்து கொள்கிறாரா இந்த பிரபல நடிகர்! அவரே வெளியிட்ட கியூட் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை பெருமளவில் கவரும் வகையிலும் ஏராளமான வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல பரிச்சயமான பிரபலங்களும், அறிமுகமில்லாத சிலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர்.
பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 ல் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றனர். தமிழில் ஒளிபரப்பாவது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இந்தநிலையில் நடிகர் நகுல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து நகுல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#nakhul's cute response to #BiggBossTamil5 rumours . . 😍😍😍 #BiggBoss #Kamal pic.twitter.com/DuBFLCouW8
— Anbu (@Mysteri13472103) March 22, 2021
அதில், பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு என்னை யாரும் அணுகவில்லை. மேலும், அப்படியே அழைத்தாலும் என் தங்கத்தை விட்டுவிட்டு செல்ல முடியாது என கூறியுள்ளார்.