#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதுவும் பெண்களே இப்படி.. ரொம்ப வேதனையா இருக்கு! நொந்துபோன நடிகர் நகுல்! ஏன் தெரியுமா??
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நகுல். அவர் தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார். நகுல் ஸ்ருதி என்பவரை காதலித்து கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அகிரா என்ற மகள் உள்ளார். ஸ்ருதி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
இந்த நிலையில் அவர் ஆண், பெண் சமத்துவத்தை குறித்து வீடியோ ஒன்றை போட்டிருந்தார். இதற்கு பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது வீடியோக்களுக்கு எதிர்மறையாக கருத்து தெரிவிப்பதற்கும் ஸ்ருதி பதிலளித்து வருகிறார். இதனால் கடந்த சில தினங்களாக நகுலுக்கு ஸ்ருதி குறித்த சர்ச்சையான போஸ்ட் வந்து கொண்டே இருந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து நகுல் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, என் மனைவியை கட்டுப்படுத்துங்கள் என மெசேஜ் அனுப்புகிறீர்கள். நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரும் என்னை போலவே உள்ளார். நான் ஒரு பெண்ணியவாதி. பெண்களை கட்டுப்படுத்தி வைக்காமல் சம உரிமை அளிக்கவே எண்ணுவேன்.
இதைப்பற்றி எனக்கு அதிகமாக பெண்கள்தான் மெசேஜ் அனுப்புகிறார்கள். அதை நினைக்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது. உங்களை இந்த மாதிரி கட்டுப்படுத்த நினைத்தால் நீங்கள் விரும்புவீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார். இந்த வீடியோவை ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.