#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
12 மணி நேரம் வலி! வித்தியாசமான முறையில் குழந்தையை பெற்றெடுத்த நகுலின் மனைவி! வைரலாகும் ஆச்சர்ய புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். பின்னர் அவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். நகுல் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இவர் நடிகராக மட்டுமின்றி ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.
நடிகர் நகுல், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கடந்த மாதம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தங்களது மகள் அகிரா பிறந்து ஒரு மாதங்கள் ஆனநிலையில் தனது பிரசவம் குறித்த புகைப்படத்தை நடிகர் நகுலின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், பிரசவ வலியால் 12 மணிநேரம் துடித்ததாகவும். வாட்டர் பர்த் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சாங்டம் பர்த் சென்டரில் பிரசவத்திற்கு உதவியாக இருந்த விஜயா மேடம் அருமையானவர். 12 மணிநேரம் வலியால் துடித்தபோது விஜயா மேடம் தான் எனக்கு உதவி செய்து தாயைப்போல அரவணைப்புடன் பார்த்துக்கொண்டார் எனவும் கூறி அவருக்கு நன்றி கூறியுள்ளார்.