#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேவயானியின் தம்பி நகுலா இது! என்ன ஒரு அழகு - வைரலாகும் புகைப்படங்கள்!
நகுல் என்ற நகுலன் தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார்.
அதன் பிறகு 'காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’,' தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' உள்ளிட்ட பல படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்துள்ளார். 2016-ல் ஸ்ருதி என்பவரை நகுல் திருமணம் செய்தார்.
இந்நிலையில் தற்போது எரியும் கண்ணாடி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவரது சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் நடிகர் நகுலா இது என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.