கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மதுரையில் அமைச்சர் வீட்டருகே பயங்கரம்.! நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி கொடூர கொலை!!
தமிழகத்தில் அண்மைக்காலமாக சினிமாவையே மிஞ்சுமளவிற்கு கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பயங்கரம்
மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களது வீட்டிற்கு அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளரான பாலசுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்பொழுது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை பின்தொடர்ந்து, பின் ஓடஓட விரட்டி சாலையிலேயே வெட்டி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க படுகொலை செய்துள்ளது.
இதையும் படிங்க: மனைவி விபச்சார வழக்கில் கைது.!! கணவரின் ஆத்திரத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்.!!
ஓட ஓட வெட்டி படுகொலை
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தல்லாகுளம் காவல்துறையினர் பாலசுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்து, இந்த கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடூரம்... செல்போனில் பேச மறுத்ததால் ஆத்திரம்.!! இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை.!!