பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...
போலீஸ் யூனிபார்ம் போட்டுகொண்டு இதற்குபோய் பயந்தாரா! நடிகை நந்திதாவே கூறிய சுவாரஸ்ய தகவல்!
![nandhitha-talk-about-shooting-spot-incident](https://cdn.tamilspark.com/large/large_images-57-31744.jpeg)
தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா. குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஐபிசி 376 படத்தில் நடிக்கிறார்.
ராம்குமார் சுப்பராமா என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில் கெத்தான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர் படப்பிடிப்பின்போது தண்ணீரில் குதிக்க பயந்துகொண்டு, இரண்டு வாரம் விடுப்பு எடுத்த சம்பவம் படக்குழுவினர் மத்தியில் காமெடியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நந்திதா கூறுகையில்,
ரவுடிகளுடன் தண்ணீருக்குள் சண்டையிடும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சண்டை பயிற்சியாளர் எவ்வளவோ தைரியம் கொடுத்தும் இரண்டு மணிநேரமாக தண்ணீரில் இறங்கவில்லை. அவ்வளவு பயம். அங்கு வேடிக்கை பார்த்த அனைவரும் போலீஸ் யூனிபார்ம் போட்டுகொண்டு தண்ணீரில் இறங்க இப்படி பயப்புடுகிறாரே என என்னை வித்தியாசமாகப் பார்த்தனர்.
ஆனாலும் பயத்தில் படப்பிடிப்புக்கு இரு வாரம் லீவு போட்டுவிட்டு பெங்களூருக்கு போய்விட்டேன். அங்கே நீச்சல் கற்றுக்கொண்டு பயத்தை போக்கிய பின் மீண்டும் வந்து அந்த சண்டை காட்சியில் நடித்தேன் என கூறியுள்ளார்.