அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை? அரசியலில் யாரும் எதிர்பாராத தகவல் லீக்.!



AIADMK TVK Alliance Conversation 17 Feb 2025 


2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி என்ற இலக்குடன் அதிமுக, நாதக, பாஜக, திமுக ஆகிய கட்சிகள் களமிறங்கி செயல்பட்டு வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தி வைத்துள்ளது. மேலும், கூட்டணி கட்சி செயல்பாட்டில் இருக்கும் இடத்திலும், தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, 2026 தேர்தலில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் வாயிலாக அரசியலில் களமிறங்கிய நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பும் நடத்தி இருந்தார். அவரின் ஆலோசனையின் பெயரில் தவெக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

AIADMK

முக்கிய பேச்சுவார்த்தை

விஜயின் அரசியல் பிரவேசம் திமுக, பாஜகவுக்கு எதிரானது என்பதால், அதிமுக விஜயை தன்வசப்படுத்தி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தரப்பில் தவெக கட்சிக்கு 60 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுவதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: அதிமுக கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தை - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி.!

ஆனால், தவெக தரப்பில் 117 தொகுதிகள் பங்கீடு, இரண்டரை ஆண்டு முதல்வர் பொறுப்பு என பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை காவலாளி Vs நோயாளியின் உறவினர்.. நாக்கூசும் வார்த்தையால் நடந்த வாதம்.!