பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் புகுந்த புது வில்லி... வைரலாகும் ப்ரோமோ வீடியோ...



Pandiyan stores 2 latest promo video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது விருவிருப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசன். அப்பா, அம்மா,அண்ணன்,தம்பி பாசம், கூட்டு குடும்பம் போன்றவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணமாய் அமைந்துள்ளது.

 

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் சீசன் தொடரில் பழனியின் திருமணம் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் பழனியின் அண்ணன்கள் எதிர்பார்த்தது போலவே திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. பழனியின் அண்ணன்கள் திட்டமிட்டு பாண்டியன் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்திவிட்டு தாங்கள் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பொங்கல் வின்னர் பட்டியலில் அமரன்.. எப்படி தெரியுமா? விபரம் உள்ளே.!

 

இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே அந்த பெண் தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வந்திருக்கும் புதுவிதமான வில்லி. இந்தபெண் பழனியிடம் ஒருமாதிரியும் வீட்டில் உள்ளவர்களிடம் வேறுமாரியும் பேசுகிறார். பழனியிடம் 

இந்த வீட்டில் எல்லாம் இருக்க முடியாது, வேலைக்காரி மாதிரி எல்லா வேலையும் செய்ய முடியாது என்றெல்லாம் பழனியிடம் கூறிவிட்டு அதன் பின் வெளியில் வந்து குடும்பத்தினர் எல்லோரிடமும் பழனிடம் கூறியதற்கு எதிர்மறையாகவும் அடக்கமான பெண் போலவும் நாடகம் போடுகிறார்.

 தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ இதோ

...