கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அவருக்கு மட்டும் ஓட்டு போடாதீங்க..கண்ணீர் மல்க கதறும் நடிகர் நாசரின் தம்பி! இதுதான் காரணமா?
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ந் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது .அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னை பகுதியில் நடிகர் நாசரின் மனைவி கமீலா வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சமீபத்தில், நாசரின் தம்பி ஜவகர் மெகபூப் பாஷா தங்களது பெற்றோரின் நிலை குறித்தும், மனவளர்ச்சி குன்றிய தனது தம்பியை நாசர் கவனித்துகொள்ளாதது குறித்தும்,இதற்கு நாசரின் மனைவி கமீலாதான் காரணம் எனவும் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜவகர் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அவர், நாசர் அனைவர் முன்பும் நல்லவர் போல நடிக்கிறார். தனது மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு பெற்றோரை கவனிப்பதில்லை.மாமனார் மற்றும் மாமியாரை மதிக்காத கமீலா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். கமல் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்க கூடாது. மேலும் கமீலாவிற்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
மேலும், நான் கொலை செய்யப்பட்டாலும் அதற்கு எனது அண்ணன் நாசர் மற்றும் அவரது மனைவி கமீலாவும் தான் காரணம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.