புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அந்த சம்பவத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கிய நாயகன் பட நடிகை.! காரணம் யார் .?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் நடிகை விசித்ரா அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி தெரிவித்த ஒரு விஷயம் ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது ஒரு நடிகர் தன்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றவுடன் விசித்திராவை எப்படியெல்லாம் தொந்தரவு செய்தார்.? பின்பு எப்படி அவர் சினிமாவை விட்டு விலகினார் என்று விசித்ரா தன்னுடைய கதையை தெரிவித்தது பொது மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி சினிமா விமர்சகரான செய்யாறு பாலு என்பவர் ஒரு youtube சேனலுக்கு பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விஷயத்தை பற்றி பேட்டியளித்திருந்தார்.
அந்த பேட்டியில் ஒரு நடிகை கமல் மீது குற்றம் சுமத்தியதாகவும், அதன் பிறகு அந்த நடிகை ஒரு சில தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்ததாகவும் தெரிவித்திருந்தார். அந்த நடிகை பகிரங்கமாக இது பற்றி ஆங்கில பத்திரிகையில் பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார் என்று பாலு கூறியிருந்தார்.
அதாவது கடந்த 1987 ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் தான் நாயகன். இந்த திரைப்படத்தில் சாருலதா என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் மகளாக நடிகை கார்த்திகா நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கமல் தன் மகளை ஓங்கி அரைவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது கமல் உண்மையாகவே கார்த்திகாவை ஓங்கி அறைந்ததில் அவர் காதிலிருந்து ரத்தம் வந்து விட்டதாக செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தை கடந்த 2016 ஆம் வருடம் மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி பகிர்ந்திருந்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நாயகன் திரைப்படத்தின் போட்டோ ஷூட்டிற்காக கமல் கார்த்திகாவின் தோள் மீது கை வைத்திருக்கிறார். ஒரு முறை கார்த்திகா அவருடைய கையை தட்டி விட்டு தன் மீது கை வைத்து நடிப்பது எனக்கு பிடிக்காது என்று அந்த இடத்திலேயே தெரிவித்து விட்டு சென்று விட்டார்.
இதன் காரணமாகத்தான், கமல் அந்த காட்சியில் கார்த்திகாவின் கன்னத்தில் உண்மையாகவே அறைந்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, வேண்டுமென்றே என்னை கமல் அடித்துவிட்டார். இனி நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்து கார்த்திகா ஒதுங்கி விட்டதாக பெல்லிசேரி தெரிவித்திருக்கிறார்.