நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் யார் என்று தெரியுமா?!



Nayagan movie childhood actress recent photos viral

1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் "நாயகன்". மேலும் படத்தில் சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் மும்பையில் வாழ்ந்த தாதா வரதராஜ் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

Nayagan

வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளிவந்த இப்படம் அப்போதே மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டைப் பெற்றது. இதையடுத்து 1988ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு நாயகன் படம் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் மூன்று தேசிய விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தில் கமலஹாசன் மற்றும் சரண்யாவுக்கு மகளாக சாரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா என்று ஒரு புகைபடம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Nayagan

பிரஷாந்த் நடிப்பில் வெளியான "வண்ண வண்ண பூக்கள்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை வினோதினி தான் கமலஹாசனின் மகளாக நடித்த சாரா என்ற தகவல் தற்போது வெளியாகி, அவரது புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.