"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
நயன் - விக்கி தம்பதியினரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவா!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் என்பவரை வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி அண்மையில் இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிவித்தனர். இந்நிலையில் தற்போது நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் தல அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் முதல் இடத்தை நயன்தாரா பிடித்துள்ளார். அதாவது அவர் நடிக்கும் படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இதுவரை நயன்தாராவிடம் மட்டும் ரூ.165 கோடி அளவிற்கு சொத்து இருக்கிறதாம். அதுமட்டுமின்றி பிரபல இயக்குனரான விளக்கும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பார்க்கும் போது இருவரின் சொத்து மதிப்பு மட்டும் 250 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.