பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கொள்ளை அழகில் நடிகை நயன்தாரா நடித்த புதிய விளம்பரம்! அவரே வெளியிட்ட அசத்தல் வீடியோ இதோ!
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது திறமையால் தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அவர் சமீபத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் ரஜினியுடன் இணைந்து அவர் நடித்த தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நயன்தாரா தற்போது ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் நடிகை நயன்தாரா பல விதமான தொலைக்காட்சி விளம்பரத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது கொள்ளை அழகில் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோவை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ad for @MyWalkmate 🥿 👡👠 pic.twitter.com/W1Et2Jgt9L
— Nayanthara✨ (@NayantharaU) March 17, 2020