கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியுதவி வழங்கிய கோலமாவு கோகிலா



nayanthara-actress-fund-to-kerala

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளா முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளாவில் கனமழை பெய்துள்ளது. தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 போ் உயிாிழந்துள்ளனா். 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 80 அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார். 

kerala flood

இதனிடையே, தமிழக அரசு சார்பில் 5 கோடி, திமுக சார்பில் 1 கோடி, மக்கள் நீதி மய்யம் 25 லட்சம், விஜய் டிவி 25 லட்சம், நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் 25 லட்சம் என அரசியல் கட்சிகள், பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர். அதேபோல், தன்னார்வல அமைப்புகள் பல தங்களால் முயன்ற அளவுநிவாரணப் பொருட்களைச் சேகரித்து, கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.