பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்ற பெயர் பெற்றுள்ளார்.
தமிழில் முதன் முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா, தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார்.
மேலும் கதாநாயகிகளுக்கு முன்னுரிமை தரும் கதைக்களத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் இருந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் கிறிஸ்மஸ் கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.