பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது! தேசிய விருது பெற்ற ஹிந்தி ரீமேக் படத்தில் நடிக்க இவ்வளவு கேட்டாரா நயன்தாரா? தலைசுற்றிப்போன படக்குழு!
ஹிந்தியில் அயுஷ்மன் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூன். காமெடி கலந்த கிரைம் த்ரில்லர் படமான இதனை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனை நடிகர் நிதின் தயாரித்து ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தில் மிகவும் முக்கியான கதாபாத்திரமான தபுவின் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா ரூ.4 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும், இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது தன் கைவசம் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை வைத்துள்ளார். இதில் நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.