#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படப்பிடிப்பில் முடிவில் நயன்தாரா கொடுத்த இன்ப அதிர்ச்சி! உற்சாகத்தில் படக்குழுவினர்
சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களின் இயக்குனர் ராஜேஷுடன் Mr.லோக்கல் என்ற படத்தில் நடித்துவருகிறார் சிவா. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். ராஜேஷின் படங்கள் அனைத்தும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகவே இருக்கும் என்பதால் இந்த படமும் நகைச்சுவை சார்ந்த ஒன்றாகத்தான் இருக்கும்.
சமீபத்தில் வித்தியாசமான தோற்றத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்பொழுது முடிவடைந்துள்ளன.
படப்பிடிப்பின் முடிவில் இந்த படத்தின் கதாநாயகி படக்குழுவினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த படப்பிடிப்பு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் கடைசி நாளன்று நயன்தாரா விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார். இதனை பெற்ற படக்குழுவினர் நயன்தாராவிற்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
கொடுத்த பணத்திற்கு நடித்து முடித்து விட்டு அமைதியாக சென்றுவிடும் நடிகைகள் மத்தியில் நயன்தாராவின் இந்த வியத்தகு செயல் அனைவரையும் பெரிதும் கவர்ந்துள்ளது. அவருக்கு இருக்கும் இந்த மனிதாபிமானம் அனைவருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் நயன்தாராவை புகழ்ந்து வருகின்றனர்.