#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை நயன்தாராவுக்கு ரொம்ப பிடிச்சது அதுதானா?? அதற்காக தனி பீரோவே வச்சிருக்காராமே!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் இவர் அசத்தலாக நடித்துள்ளார். இவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருப்பதி தரிசனம், தாய்லாந்தில் ஹனிமூன் என பிஸியாக இருந்த நயன்தாரா தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அவர் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
நயன்தாராவுக்கு கைக்கடிகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவர் எங்கு சென்றாலும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்வாராம். அவ்வாறு தான் வாங்கும் கைக்கடிகாரங்களை பத்திரமாக வைக்க வீட்டில் தனி பீரோ வைத்துள்ளாராம். நயன்தாராவுக்கு மிகவும் பிடித்தது Richard Mille கைக்கடிகாரங்கள்தானாம். மேலும் அவர் விரும்பி அணியும் கைக்கடிகாரத்தின் விலை ரூ. 1 கோடியே 20 லட்சம் என கூறப்படுகிறது.