சினிமா சீர்கெட்ட நிலையில் இருப்பதற்கு மோசமான நடிகர் தான் காரணம்.. நயன்தாரா பட இயக்குனரின் சர்ச்சையான பேச்சு..



Nayanthara movie director controversy interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பலர் இருந்து வருகின்றனர். இவர்களின் படம் தொடர்ந்து வெற்றி அடைந்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகின்றது.

Nayan

இது போன்ற நிலையில், நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் கோபி நயினார். ஒரு திரைப்படத்தை மட்டுமே இயக்கி இருந்தாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டு வந்தது.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர்களை குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Nayan

இவர் கூறியதாவது, "சினிமா துறை சீர்கெட்ட நிலையில் இருக்கிறது. முன்பெல்லாம் கதைக்காக நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது நடிகர்களுக்காக கதை எழுதப்பட்டு வருகிறது. அந்த மோசமான நடிகர் எந்த இயக்குனர், தயாரிப்பாளர்கள் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்கிறார். இவ்வாறு சினிமாவில் சீர்கெட்ட தன்மை அதிகம் வந்துவிட்டது. மோசமான நடிகர்களாக இருந்தாலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார்.